பெண்கள் பேரணிக்கு நார்த்தர்ன் அலையன்ஸ் தடை
காபூல்:
காபூலில் இன்று நடைபெறுவதாக இருந்த பெண்கள் பேரணிக்கு நார்த்தர்ன் அலையன்ஸ் தடை விதித்ததையடுத்து,இவர்களும் தலிபான்களைப் போலவே பெண்கள் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் என்று அந்நாட்டு பெண்கள்சங்கத் தலைவி குறை கூறினார்.
நார்த்தர்ன் அலையன்சும் தலிபான்களைப் போல பெண்கள் முன்னேற்றத்தை விரும்பவில்லை. அதனால் தான்நாங்கள் நடத்தத்திட்டமிட்டிருந்த பேரணிக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை என்று பெண்கள் சங்கஅமைப்பாளர் சொராயா பார்லிகா புகார்கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
எங்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தான் நாங்கள் நடத்தத் திட்டமிட்டிருந்த பேரணிக்கு அனுமதியளிக்கவில்லை என்று நார்த்தர்ன் அலையன்ஸ் உள்துறை அமைச்சர் யூனிஸ் கனானி கூறுகிறார். ஆனால் உண்மையில்இவர்களும், தலிபான்களைப் போலவே பெண்கள் முன்னேற்றம் அடைவதை விரும்பாதவர்கள்.
இதனால் ஆப்கானில் ஏற்படவிருக்கும் புதிய ஆட்சிகுறித்து ஜெர்மனியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்கூட்டத்திற்குச் செல்லும் முன்பாகவே கனானி எனக்கு போன் செய்து, பேரணியைக் கைவிடுமாறு கேட்டார்.
இருப்பினும் இன்று என் வீட்டிலிருந்து காபூல் நகரத் தெருக்கள் வழியாக ஐக்கிய நாடுகள் சபைத் தூதரகத்திற்குஊர்வலம் செல்லத் திட்டமிட்டு, அனுமதி கிடைக்கும் என்று காத்திருந்தோம்.
ஆனால் இன்றும் உள்துறை அமைச்சகத்திலிருந்து எங்களுக்கு வந்த போனில் அனுமதி அளிக்க முடியாது என்றுகூறப்பட்டது. எங்கள் பாதுகாப்பிற்காகத் தான் பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை என்று அவர்கள் கூறினாலும்,உண்மையில் பெண்கள் முன்னேற்றத்தில் இவர்களுக்கும் அக்கறை இல்லை என்பதுதான் உண்மை என்றார்.
முன்பெல்லாம் தலிபான்களின் வற்கபறுத்தலின் பேரில் பெண்கள் இனைவரும் தலையிலிருந்து கால் வரைமறைக்கும் விதத்தில் புர்கா என்ற ஆடையை அணிந்திருப்பார்கள். ஆனால் இதை அணிவதை பெண்கள்விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications