கட்டண உயர்வை பொறுத்துக் கொள்ளுங்கள்: ஜெ. கோரிக்கை
சென்னை:
கட்டண ஏற்றங்களை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பஸ் கட்டணம், பால்விலை, மின் கட்டணம் ஆகியவை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்துஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:
மன மகிழ்ச்சியோடு இதை தமிழக அரசு செய்யவில்லை. கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியின்போதுஒவ்வொரு துறையிலும் ரூ.2000 கோடி, ரூ.3000 கோடி அளவுக்கு நிதி சீர்கேடு நடந்துள்ளது.
அதை சமாளிக்கவே இதுபோன்ற கடுமையான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று.
1989 முதல் 1991 வரை பதவியில் இருந்த திமுக ஆட்சி மற்றும் 1996 முதல் 2001 வரையில் பதவியில் இருந்ததிமுக ஆட்சிக்காலங்களில் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
1996ம் ஆண்டு அதிமுக ஆட்சி பதவியிலிருந்து விலகியபோது ரூ.800 கோடி அளவுக்கு உபரி நிதியை விட்டுச்சென்றிருந்தோம். ஆனால் பின்னர் வந்த திமுக ஆட்சியினர் அதை சீர்கெடுத்து விட்டனர்.
அரசின் நிதி நெருக்கடியை உணர்ந்து பொதுமக்கள் இந்த நிதி சீரமைப்பு நடவடிக்கையை பொறுத்தக் கொண்டுஅரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications