திமுக உறவை முறிக்க தமிழக பாஜக தீவிரம்
சென்னை:
திமுகவுடன் உள்ள உறவை முறித்துக் கொள்வதா அல்லது தொடரலாமா என்பது பற்றி டிசம்பர் 2ம் தேதிசென்னையில் நடைபெறும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் உள்சதி வேலைகள் செய்து பாரதிய ஜனதாக் கட்சி வேட்பாளர்களைத்தோற்கடித்து விட்டார்கள் என்றும் இதனால் அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் பா.ஜ.க.தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில் அடுத்த மாதம் சென்னையில் நடக்கவுள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இந்தக் கருத்துவலியுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் திருப்திப்படும் வகையில் திமுகதொகுதிப் பங்கீடு செய்து கொடுத்தது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர்கள் பாரதியஜனதாவின் வெற்றிக்கு ஒத்துழைக்க வில்லை. மாறாக உள்சதி வேலைகள் செய்து பா.ஜ.கவினரைத் தோற்கடித்துவிட்டனர் என்று பா.ஜ.க. தொண்டர்கள் திமுகவினர் மீது கோபத்தில் உள்ளனர்.
இதுகுறித்து கட்சி மேலிடத்துக்கும் தெரியப்படுத்திவிட்ட தொண்டர்களும், நிர்வாகிகளும் முதுகில் குத்தியதிமுகவோடு இனிமேலும் கூட்டணியைத் தொடரக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் கட்சி மேலிடம் இதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமல், உளவுத்துறை மூலம் உண்மையில் நடந்ததைக்கண்டறிய விரும்பியது. உளவுத்துறை ஆய்வு நடத்தி கட்சி மேலிடத்துக்கு அளித்த அறிக்கையும் தொண்டர்களும்,நிர்வாகிகளும் கூறிய கருத்து உண்மையானதுதான் என்று கூறியது.
இந்நிலையில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தொண்டர்களிடம்கருத்துக் கேட்க மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கோவை. ராதாகிருஷ்ணன் எம்.பி., முன்னாள் தமிழகபா.ஜ.க. தலைவர் லக்ஷ்மணன் உள்ளிட்ட தலைவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது பெரும்பாலான தொண்டர்கள் திமுகவுடன் உள்ள உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 2ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இதுகுறித்துஇறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால் கூட்டணி குறித்து தமிழகத் தலைவர்கள் என்ன முடிவெடுத்தாலும், கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள்என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications