தமிழக போலீசுக்கு பத்திரிக்கை கவுன்சில் கண்டனம்
டெல்லி:
கருணாநிதி கைது செய்யப்பட்டபோதும், பின்னர் நடந்த சம்பவங்களின்போதும் சென்னையில் நிருபர்களைபோலீசார் திட்டமிட்டுத் தான் தாக்கினர் என விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது. திமுகதலைவர் கருணாநிதி கைது சம்பவத்தின்போதும், கைதை கண்டித்து திமுக நடத்திய பேரணியின்போதும்நிருபர்களை தனியே சூழ்ந்து நின்று கொண்டு போலீசாரும் ரெளடிகளும் தாக்கினர்.
இது குறித்து இந்திய பத்திரிக்கை கவுன்சிலின் 5 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. டிர்பியூன் நாளிதழின்எடிட்டர் ஹரி ஜெய்சிங் இந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தார். இக் குழு சமர்பித்துள்ள அறிக்கையில் தமிழகபோலீஸ் துறை மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:
உண்மைச் சம்பவங்களை நிருபர்கள் போட்டோ எடுத்துவிடக் கூடாது என்பதைத் திட்டமிட்டே போலீசார்தடுத்துள்ளனர். இதற்காகத் தான் நிருபர்களை தாக்கினர்.
கருணாநிதி கைது செய்யப்பட்டதை சன் டிவியில் காட்டியபோது மக்கள் மத்தியில் போலீஸ் அராஜகத்துக்குஎதிரான கருத்து கிளம்பியது. இதே போல போலீசுக்கு எதிரான, அரசுக்கு எதிரான தகவல்கள் வெளியில்போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் திமுக பேரணியில் நிருபர்கள் மீது போலீஸ் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலீசாருக்கு பயிற்சி போதவில்லை. சென்னை போலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பனின் பாஷையில்சொன்னால், போதிய பயிற்சி இல்லாததால் தான் போலீசார் காக்கிச் சட்டை போட்டுக் கொண்டு கிரிமினல்வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
சட்டம் ஒழுங்கை காக்கிறோம் என்று கூறிக் கொண்டு போலீசாரே அராஜகத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
போலீஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நிருபர்களுக்கு உடனடியாக போதிய நஷ்டஈடு வழங்கவேண்டும்.உடைக்கப்பட்ட கேமராக்கள், லென்ஸ்கள், மொபைல் போன்களுக்கும் நஷ்ட ஈடு தர வேண்டும்.
ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான ஜெயா டிவிக்கு முக்கியத்துவம் தருவது, பிற பத்திரிக்கையாளர்களைஒதுக்குவது போன்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications