ஆப்கானிஸ்தான்: இடைக்கால அரசு தயார்

Subscribe to Oneindia Tamil

பான் (ஜெர்மனி):

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கும்முன்னாள் மன்னர் ஷகீர் ஷாவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்படி இடைக்காலப் பிரதமரை மன்னர் ஷகீர் ஷா நியமிப்பார். ஆனால், நாட்டின் பாதுகாப்புத்துறை நார்த்தர்ன்அலையன்ஸ் கையில் இருக்கும்.

கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்களையும் இப்போது அமெரிக்கத் தாக்குதலையும் சந்தித்து வருமஆப்கானிஸ்தானுக்கு இந்த உடன்பாடு மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நார்த்தர்ன் அலையன் படையினரில் பெரும்பான்மையினர் உஸ்பெக், தஜிக் மற்றும் ஹஸாரா இனத்தைச்சேர்ந்தவர்கள். ஆனால், நாட்டின் 40 சதவீத மக்கள் புஷ்தூன் இனத்தினர். இப்போது நாட்டைதலிபான்களிடமிருந்து நார்த்தர்ன் அலையன்ஸ் கைப்பற்றியுள்ளது. தலிபான்கள் புஷ்தூன் இனத்தினர் தான்.முன்னாள் மன்னர் ஷகீர் ஷாவும் புஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர் தான்.

இப்போது நார்த்தர்ன் அலையன்ஸ் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாடு இருந்தாலும் பெரும்பான்மையினரானபுஷ்தூன் மக்கள் இவர்களை ஆதரிக்கவில்லை. தலிபான்களை விரட்டி தங்களுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்ததற்காகத் தான் நார்த்தர்ன் அலையன்ஸ் படையை தாற்காலிகமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந் நிலையில் அனைத்து இனத்தினரும் கொண்ட ஒரு அரசை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுள்ளமுயற்சிகளின் ஒரு படியாக ஜெர்மனியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதில் நார்த்தர்ன் அலையன்ஸ், முன்னாள் மன்னர் ஷகீர் ஷாவின் பிரதிநிதிகள், புஷ்தூன் இன பழங்குடித்தலைவர்கள் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக இந்த பேச்சுவார்த்தைகள் இழுபறியாக நடந்து வந்தன. இடைக்கால ஆட்சியை தங்கள்ராணுவத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜனாதிபதி புர்ானுதீன் ரப்பானியிடம் தான் ஒப்படைக்க வேண்டும் எனநார்த்தர்ன் அலையன் கோரி வந்தது.

இதை ஷகீர் ஷா ஏற்கவில்லை. தாங்கள் சொல்லும் நபர் தான் இடைக்கால அரசுக்கு தலைமை தாங்குவார் என்றார்.

இதனால் பேச்சுவார்த்தை இழுபறியானது. ஆனால், இப்போது இடைக்காலப் பிரதமர் பதவியை ஷகீர் ஷாவின்ஆட்களுக்கு விட்டுத் தர நார்த்தர்ன் அலையன்ஸ் ஒப்புக் கொண்டுவிட்டது.

ஆனால், பாதுகாப்புத்துறையும் ராணுவமும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறிவிட்டனர்.

இதை ஷகீர் ஷா ஏற்றுக் கொண்டுவிட்டார். அதே போல இடைக்காலப் பிரதமராக தனது புஷ்தூன் இனத்தைச்சேர்ந்தவரை நியமிக்காமல், உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த அப்துல் சத்தார் சிராத்தை என்வரை நியமிக்கவும் முன்வந்துள்ளார்.

இதனால் பிரதமருக்கும் ராணுவத்துக்கும் இடையே இன மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். ஷகீர் ஷாவின்இந்த ராஜதந்திரமான முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பெரும் மகிழ்ச்சி தெரிவித்துளளது.

இப்போது ஜெர்மனியில் நடந்து வரும் பேச்சுவார்த்தைக்கு ஷகீர் ஷாவின் சார்பில் தலைமை தாங்கி பேச்சு நடத்திவருபவர் தான் இந்த அப்துல் சத்தார் சிராத்.

உஸ்பெக் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள புஷ்தூன் இனத்தினர் மீதுமிகுந்த மரியாதை கொண்டவர் சிராத். இதனால் தான் அவரை ஷா தேர்ந்தெடுத்துள்ளார்.

இது குறித்து நார்த்தர்ன் அலையன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லா அப்துல்லா கூறுகையில்,அடுத்த பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு (ஷகீர் ஷா-புஷ்தூன் இனத்தினருக்கு)வழங்கிவிட்டோம். ஆனால், ராணுவம் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று நம்புகிறோம். தலிபான்களுக்கு ஆதரவாகப்போரிட்டவர்களை என்ன செய்வது என்பது குறித்தும் இந்த அரசு முடிவெடுக்கும் என்றார்.

காண்டஹார் விமான நிலையத்தில் எதிர்ப் படை:

இந் நிலையில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள கான்டஹார் நகருக்குள் நுழைய ஆரம்பித்துள்ள நார்த்தர்ன்அலையன்ஸ் படையினர் அங்குள்ள விமானத் தளத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

இங்கு எதிர் தாக்குதல் மிகத் தீவிரமாக இருப்பதால் இந்தப் படையினரால் வேகமாக முன்னேறிச் செல்லமுடியவில்லை. ஒரு வாரத்தில் நாட்டின் 75 சதவீதத்தைப் பிடித்த இந்தப் படையினரால் கடந்த 10 நாட்களாககாண்டஹாருக்குள் நுழைய முடியவில்லை.

இப்போது தான் அடி மேல் அடி வைத்து அந்த நகருக்குள் நார்த்தர்ன் அலையன்ஸ் படை நுழைகிறது.

உள்ளே நுழையும் இந்தப் படைகளுக்கு அமெரிக்க விமானங்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன. இந்தப்படைகளைத் தாக்கும் தலிபான் படைகள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசி வருகின்றன.

அமெரிக்க விமானத் தாக்குதலில் காண்டஹாரின் வீடுகளும் தப்பவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த நகரில் இருந்து வெளியேறி பாகிஸ்தான் எல்லையில் குவிந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+