பின் லேடனை தேடி மலைக் குகைகளில் வேட்டை
ஜலாலாபாத்:
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் மறைவிடத்தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறப்படுவதைத்தொடர்ந்து, ஆப்கானின் டோரா போரா மலைக்குகைப் பகுதிகளை அமெரிக்கப்படைகள் முற்றுகையிட்டுள்ளன.
இதுகுறித்து இவர் நேற்று (திங்கள்கிழமை) அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
பின் லேடன் எங்கு இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், அமெரிக்க விமானங்கள் டோரா போராமலைக்குகைகளின் மீது பயங்கரத் தாக்குதல் நடத்தின.
நடந்தோ அல்லது குதிரைகள் மூலமாக மட்டுமே செல்லக்கூடிய இந்த குகைப்பகுதிகளில் தான் பின் லேடன்ஒளிந்துகொண்டிருப்பதாக அமெரிக்கப்படைகள் கருதுகின்றன.
கடந்த மூன்று நாட்களாக அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் 200 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு ஜமன் கூறினார்.
இதற்கிடையில் பின் லேடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்படும் மற்றொரு இடமான காண்டஹார்மலைப்பகுதிகளிலும், அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications