கிரிக்கெட்: வலுவான நிலையில் இந்தியா
மொஹாலி:
மொஹாலியில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 469ரன்கள் பெற்று இந்திய கிரிக்கெட் அணி வலுவான நிலையில் உள்ளது.
மூன்றாவது நாள் ஆட்டத்தை இன்று (புதன்கிழமை) காலை துவங்கினர் ராகுல் டிராவிட்டும் சச்சின் டெண்டுல்கரும்.
ஆனால் முதல் ஆறு ஓவர்கள் மட்டுமே டிராவிட்டால் களத்தில் நிற்க முடிந்தது. சதத்தை நழுவ விட்ட டிராவிட், 86ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து கேப்டன் சவுரவ் கங்குலியுடன் ஜோடி சேர்ந்த டெண்டுல்கர், இங்கிலாந்து பவுலர்களின் பந்துகளைவிளாசித் தள்ளினார். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென்றுஉயர்த்தினர்.
இந்நிலையில் இந்திய ரசிகர்களைப் பெரிதும் ஏமாற்றி விட்டு, தன்னுடைய சதத்தையும் கோட்டை விட்டார்டெண்டுல்கர். அவர் 144 பந்துகளைச் சந்தித்து 13 பவுண்டரிகளுடன் 88 ரன்களை எடுத்து அவுட்டானார்.
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 370/5. அடுத்த சிறிது நேரத்திலேயே 47 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தகங்குலியும் பெவிலியன் திரும்பினார்.
அதற்குப் பிறகு ஆடியவர்களில் வி.வி.எஸ். லக்ஷ்மணும் (28 ரன்கள்) புதுமுகமான பாங்கரும் (36 ரன்களும்)சித்திக்கும் (24 ரன்கள்) ஓரளவு சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை வலுவான நிலைக்குக் கொண்டுசெல்ல உதவினர்.
கடைசியில் 469 ரன்களுக்கு இந்திய அணி முதல் இன்னிங்சை இழந்தது. மொத்தம் 169 ஓவர்களில் இந்தியா இந்தஸ்கோரை எடுத்துள்ளது.
அடுத்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்சைத் துவங்கிய இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்ட நேர இறுதியில்விக்கெட் இழப்பின்றி 34 ரன்களை எடுத்துள்ளது.
இன்னிங்ஸ் வெற்றியைத் தவிர்ப்பதற்கு இங்கிலாந்து அணி 231 ரன்களை இந்த இன்னிங்சில் எடுத்தாக வேண்டும்.
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 238/10 (76.3 ஓவர்கள்)
இந்தியா - 469/10 (169 ஓவர்கள்)
2வது இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 34/0 (20 ஓவர்கள்)
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications