சாந்தகுமார் கழுத்தை லுங்கியால் நெறித்துக் கொன்ற டேனியல்
கொடைக்கானல்:
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை, காரில் கொடைக்கானல் மலைக்குக் கொண்டு செல்லும் வழியில்ராஜகோபாலின் அடியாட்களில் ஒருவரான டேனியல் லுங்கியால் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ஜீவஜோதியை, சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மிரட்டி தன்னை 3-வதுதிருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், இதுதொடர்பாக தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைகடத்திச் சென்று விட்டதாகவும் கூறி வேளச்சேரி போலீஸில் ஜீவஜோதி புகார் கொடுத்தார். இதையடுத்துராஜகோபால் காஞ்சிபுரம் கோர்ட்டில் சரணடைந்தார்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ராஜகோபாலின் ஆட்கள், சாந்தகுமாரை கொன்று கொடைக்கானல்மலையிலிருந்து உருட்டி விட்டது தெரிய வந்தது.இதையடுத்து கொடைக்கானல் போலீஸாரைத் தொடர்புகொண்டபோது அடையாளம் தெரியாத பிணமாக சாந்தகுமார் புதைக்கப்பட்டது தெரிய வந்தது.
தனது கணவரின் இறந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து ஜீவஜோதியும் அவர் சாந்தகுமார்என்பதை அடையாளம் காட்டினார். இதையடுத்து சாந்தகுமாரின் உடலை தோண்டியெடுக்க முடிவுசெய்யப்பட்டது.ஹ
அதன்படி செவ்வாய்க்கிழமை காலை சாந்தகுமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதை ஜீவஜோதிஅடையாளம் காட்டினார். பின்னர் மதுரை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் நடராஜன், தலைமையில்அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் கல்லீரல், சிறுகுடல், மண்டை ஓடு ஆகியவை ரசாயணப் பரிசோதனைக்காக சென்னைக்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சாந்தகுமார் கொலை தொடர்பான விசாரணையில் ராஜகோபாலின் அடியாட்களில் ஒருவரானடேனியல், கார் டிரைவர் பட்டு ராஜா உட்பட 5 பேர் சுமோ காரில் சாந்தகுமாரை மயங்கிய நிலையில்கொடைக்கானலுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
செல்லும் வழியில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே, காருக்குள் வைத்து டேனியல் லுங்கியால்,சாந்தகுமாரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளான். மற்ற மூவரும் சாந்தகுமாரை துள்ளாமல்இறுக்கிப்பிடித்துள்ளனர்.
இதுகுறித்து ராஜகோபால் உட்பட, கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும் போலீசார் மேலும் விசாரித்துவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications