ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைவதில் திடீர் சிக்கல்
மஷார்-ஏ-ஷெரீப்:
ஆப்காஸ்தானில் இடைக்கால அரசு பதவியேற்பதற்கு முன்னதாகவே அதற்கு பிரச்சனைகள் தொடங்கிவிட்டன.
இவர் தலைமையிலான படையினர் தான் முதன்முதலில் தலிபான்களை அடித்து விரட்டி மஷார்-ஏ-ஷெரீப் நகரைக்கைப்பற்றியது. தலிபான்களுக்கு இவரிடம் தான் முதல் தோல்வி கிடைத்தது.
6 ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையின் தலைவராக இருந்த அப்துல் ரஷீத்தோஸ்தமுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாகத் தான், அங்கு நஜிபுல்லா தலைமையில் இருந்த ஆட்சி கவிழ்ந்துதலிபான்கள் தலைதூக்கினர்.
தோஸ்தமுக்கு உஸ்பெகிஸ்தானும் ஈரானும் ஆதரளித்து வருகின்றன. இவரது படைகளுக்கு இந்த நாடுகள் தான்ஆயுதங்கள் வழங்கி வருகின்றன.
சமீபத்தில் தான் இவர் தலிபான்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மீண்டும் நார்த்தர்ன் அலையன்சுடன்இணைந்து யுனைட்டட் அலையன்ஸ் என்ற பெயரில் போராடி வந்தார்.
இவர் அடிக்கடி அணி மாறுவது வழக்கம் என்பதால் இவரை நார்த்தர்ன் அலையன்ஸ் ஒதுக்கியே வைத்திருந்தது.ஆனால், தலிபான்களை வெல்ல இவரது படை பலம் முக்கியம் என்பதால் அவருடன் கைகோர்த்தது.
ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆட்சி குறித்து ஜெர்மனியில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இவரதுபிரதிநிதிகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதே போல பாகிஸ்தான் ஆதரவுடன் கலந்து கொண்டகுழுவும் ஒதுக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசில் தனது ஆட்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று குறை கூறியுள்ளதோஸ்தம், அந்த ஆட்சியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் மஷார்-ஏ-ஷெரீப் உள்ளிட்டசில நகரங்கள் புதிய இடைக்கால அரசின் கட்டுப்பாட்டில் கீழ் வராது.
இந்த நகரங்களை இவரிடமிருந்து போர் புரிந்து பறிக்க வேண்டிய நிலைக்கு நார்த்தர்ன் அலையன்ஸ்தள்ளப்படலாம். அப்படிப்பட்ட நிலையில் நார்த்தர்ன் அலையன்சுக்கும் உஸ்பெக் இனத்தினருக்கும் இடையேமோதல் வரலாம். இதனால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் இனப் போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகும்.
இதை அமெரிக்கா நிச்சயம் அனுமதிக்காது. தோஸ்தமை எப்படியாவது சமாதானப்படுத்தும் முயற்சிகள் விரைவில்தொடங்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications