இந்தியா வந்தார் ஆப்கானிஸ்தான் அமைச்சர்
டெல்லி:
ஆப்கானிஸ்தான் புதிய அரசின் உள்துறை அமைச்சர் யூனுஸ் கானூனி இந்தியா வந்துள்ளார். இவர் நார்த்தர்ன்அலையன்ஸ் படையின் உள்துறை அமைச்சராக இருந்தவர். புதிய அரசிலும் அதே பொறுப்பில் தொடர்கிறார்.
இவர் ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள இடைக்கால அரசு பற்றியும், அந்த அரசு மேற்கொள்ள இருக்கும்நடவடிக்கைகள் குறித்தும் இந்தியத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோரை கானூனி சந்திக்கஉள்ளார்.
ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசில் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் கானூனி முதன்முதலில் பயணம் செய்யும்நாடு இந்தியா தான். சமீபத்தில் இவர் தான் நார்த்தர்ன் அலையன்ஸ் சார்பில் ஜெர்மனியில் கலந்கு கொண்டகுழுவுக்குத் தலைவராக இருந்தார்.
இவர் இந்தியாவின் தீவிரமான ஆதரவாளர். இவருடன் சேர்ந்து வெளியுறவு அமைச்சராக பதவியேற்க உள்ளடாக்டர் அப்துல்லா அப்துல்லா, பாதுகாப்பு அமைச்சர் முகம்மத் பகீம் ஆகியோரும் இந்தியாவுக்கு மிகநெருக்கமானவர்கள்.
தலிபான்களையும் பாகிஸ்தானையும் எதிர்த்துப் போராட இவர்கள் தலைமையில் இயங்கிய நார்த்தர்ன்அலையன்ஸ் படைக்கு இந்தியா நிதி, ஆயுத, மருத்துவ உதவிகளை வழங்கி வந்தது.
இப்போது இவர்கள் ஆட்சிக்கு வருவதையடுத்து இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவு மீண்டும் சுமூகமாகும். இதுபாகிஸ்தானுக்கு பெரும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications