படு வேகத்தில் பதிலடித் தாக்குதல் நடத்திய பாதுகாப்புப் படையினர்
டெல்லி:
நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ்,இந்தோ-திபெத் எல்லை போலீஸ், இன்டலிஜென்ஸ் பீரோ உளவுப் பிரிவினர், கறுப்புப் பூனைப் படையினர்ஆகியோர் மிக விரைவாக பதிலடித் தாக்குதல் நடத்தியதால் தான் பெரும் அளவிலான உயிர்ச் சேதம்தவிர்க்கப்பட்டுள்ளது.
அவர்கள் சுடத் தொடங்கிய சில வினாடிகளிலேயே சுதாரித்துக் கொண்டு பதிலடித் தாக்குதலைத்தொடங்கிவிட்டனர் இந்தியப் படையினர்.
டெல்லி போலீசைச் சேர்ந்த சுரேஷ் குமார் உடனடியாக ஓடிச் சென்று அபாய எச்சரிக்கை மணியை அழுத்தினார்.இதையடுத்து நாடாளுமன்றத்தின் பல பகுதிகளில் பரவி நின்றிருந்த படையினர் உடனடியாக ஓடி வந்துதீவிரவாதிகளை சுற்றி வளைத்துச் சுட்டனர்.
அவர்கள் நாடாளுமன்ற மத்திய அவைக்குள் நுழைந்துவிடாமல் தடுத்தனர். மேலும் துணை ஜனாதிபதி இருந்தபகுதிக்கு உடனடியாக கூடுதல் படைகள் விரைந்து அவரைப் பாதுகாத்தனர்.
சில நிமிடங்களிலேயே அமைச்சர்களின் அறைகளை பூட்டிக் கொண்டு வெளியில் காவலுக்கு நின்றனர். அதேபோல வளாகத்தில் இருந்த எம்.பிக்களையும் அருகில் இருந்த பாதுகாப்பான பகுதிகளுக்கும் இழுத்துச் சென்றனர்.
இதனால் சுமார் 400 எம்.பிக்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்தும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாகிக்கிக் குண்டுகள் சீறிப் பாயந்தபோது கார் பார்க்கிங் அருகே தோட்டத்தில் நின்றிருந்த காவலாளி தான்முதுகில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார்.
துப்பாக்குகிச் சூடு நடந்து கொண்டிருந்தபோதே ராணுவம் வந்திறங்கிவிட்டது. அதே போல உயர் அதிகாரிகளும்உடனடியாக அந்த இடத்தில் இருந்தனர். ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்தன.
அரை மணி நேரத்தில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு அவர்கள் கொண்டு வந்த குண்டுகளையும்அப்புறப்படுத்தி காயமடைந்த 26 பேரை மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தனர் இந்திய பாதுகாப்புப்படையினர்.
அதே போல பெல்டில் பாம் அணிந்திருந்த ஒரு தீவிரவாதி நாடாளுமன்றத்தின் முக்கிய வாயில் வழியாக மறைந்துமறைந்து ஊடுருவி போது, அவன் கண்ணில் படாமல் மறைந்து நின்றிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்காவலர் அந்த பெல்டில் இருந்த வெடிகுண்டை நோக்கி சுட்டார். இதில் அந்த குண்டு வெடித்து தீவிரவாதிஇறந்தான்.
தாக்குதலில் மொத்தம் 6 போலீசார் கொல்லப்பட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications