அல்-கொய்தாவினரைத் துரத்தும் பழங்குடிப் படையினர்

Subscribe to Oneindia Tamil

தோரா போரா:தோரா போரா மலைப் பகுதிகளில் இருந்து தப்பித்து ஓடும் அல்-கொய்தா படையினரை ஆப்கானியப் பழங்குடிப்படையினரும் அமெரிக்கப் படையினரும் துரத்திப் பிடித்து வருகின்றனர்.

தோரா போரா மலைக் குகைகள் மற்றும் சுரங்கங்களில் ஒளிந்திருந்து தாக்கி வந்த அல்-கொய்தா படையினரைபழங்குடிப் படையினர் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் நூற்றுக்கணக்கான வீரர்கள் குகைகளை விட்டு வெளியேறி,தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி ஓடுபவர்களை பழங்குடிப் படையினரும் அமெரிக்கப் படையினரும் துரத்தித் துரத்தித் தாக்கி வருகின்றனர்.

இதனால் பல அல்-கொய்தா படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் கண்ணீரும் கம்பலையுமாகவேறு வழியில்லாமல் சரணடைந்து வருகின்றனர். ஒரு மாதத்திற்கு முன் தாங்கள் பின் லேடனை இப்பகுதிகளில்பார்த்ததாக பிடிபட்ட அல்-கொய்தாவினர் கூறினர்.

அமெரிக்க விமானங்கள் தற்போது குண்டு வீச்சுத் தாக்குதலை ஓரளவு நிறுத்தியுள்ள போதிலும், அடர்ந்த காட்டுப்பகுதியில் தொடர்ந்து பயங்கரமாகக் குண்டுகளை வீசி வருகின்றன.

இந்தக் காட்டு வழியாகத்தான் அல்-கொய்தாவினர் தப்பித்து ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை60க்கும் மேற்பட்ட அல்-கொய்தாவினர் இந்தக் காட்டுக்குள் மறைந்து கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

கண்ணிவெடியில் சிக்கி காலை இழந்த அமெரிக்க வீரர்:

இதற்கிடையே காண்டஹார் விமான நிலையத்தில் தலிபான்கள் விட்டுச் சென்ற கண்ணிவெடியில் தவறுதலாகச்சிக்கிக் கொண்ட ஒரு அமெரிக்க மெரைன் வீரர் தன்னுடைய காலை இழந்தார்.

மேலும் இரண்டு அமெரிக்க மெரைன் வீரர்களுக்கு இச்சம்பவத்தின்போது காயமேற்பட்டது.

இங்கு மேலும் பல கண்ணிவெடிகள் இருக்கலாம் என்று கருதும் அமெரிக்க மெரைன் வீரர்கள், தொடர்ந்துஅவற்றை எடுத்து அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 4 அமெரிக்க வீரர்கள் பலி:

அக்டோபர் 7ம் தேதி ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, இதுவரை 4 அமெரிக்கவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காண்டஹார் அருகே அமெரிக்க விமானங்கள் வீசிய குண்டுகள் தவறுதலாக அமெரிக்கத் தரைப் படையினர் மீதேவிழுந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மசார்-ஏ-ஷெரீப் சிறைக் கலவரத்தில் ஒரு அமெரிக்க உளவுத் துறைஏஜென்ட் கொல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+