சேலம் அருகே போலி மது குடித்த தம்பதி உள்பட 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

சேலம் அருகே மது குடித்த கணவன், மனைவி உட்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சேலம் மாவட்டம் அருகே புனாச்சியை சேர்ந்தவர் சித்தன் (70), இவரது மனைவி ராஜம்மாள் (55). நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இருவரும் மேட்டூர் அருகே மூலக்காட்டில் உள்ள மைத்துனர் தங்கராஜ் வீட்டுக்குவிருந்துக்கு சென்றனர்.

மதியம் விருந்துக்கு முன் மூவரும் மது குடித்துள்ளனர். மது குடித்து சில நிமிடங்களில் மூவரும் மயங்கிவிழுந்துள்ளனர். சித்தன், அவரது மனைவி ஆகியோர் மேட்டூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர்.

தங்கராஜ் ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

மது குடித்த மூவரும் அடுத்தடுத்து இறந்துள்ளதால் மேட்டூர் பகுதியில் போலி மது சப்ளை செய்யப்பட்டுள்ளதாகமக்கள் மத்தியில் பீதி ஏற்ப்பட்டுள்ளது.

இது குறித்து மேட்டூர் போலீசார் கூறுகையில்,மது குடித்த மூன்று பேருக்கும் ஆஸ்துமா இருந்துள்ளது. அதற்காகநாட்டு மருந்து சாப்பிட்டுள்ளனர். அதை தொடர்ந்து மது சாப்பிட்டதால் இறந்துவிட்டனர். மூவரின் சாவு பற்றி பலகோணங்களில் விசாரித்து வருகிறோம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+