இந்தியா நடத்திய தாக்குதலில் 22 பாகிஸ்தான் வீரர்கள் பலி
ஜம்மூ:
பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலை எதிர்த்து இந்தியப் படைகள் நடத்திய தாக்குதலில் 22 பாகிஸ்தான்வீரர்கள் பலியாயினர்.
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உயரமான மலைப் பகுதிகள்உள்ளன. இங்கு தரைப் பகுதியில் தான் இந்திய ராணுவம் இயங்க வேண்டியுள்ளது.
மலைகளில் இருந்து இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிகளால் சுடுவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது.சமீபத்தில் இப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சுட்டு 3 இந்திய எல்லைப் படை வீரர்கள் இறந்தனர்.
நேற்றும் இந்தியப் படைகள் மீது பாகிஸ்தானியர்கள் சுட்டனர். எல்லையில் உள்ள கிராமத்தினரையும் பாகிஸ்தான்படைகள் விடவில்லை. கனரக துப்பாக்கிகளைக் கொண்டு அவர்கள் நடத்திய தாக்குதலில் 2 இந்திய கிராமவாசிகள்காயமடைந்தனர்.
இதையடுத்து அந்தப் பகுதியில் மிக பயங்கர தாக்குதலில் இந்தியா இறங்கியது. 81 எம்.எம். மார்ட்டர் ரகதுப்பாக்கிகளைக் கொண்டு பாகிஸ்தானிய படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அவர்கள் குவித்து வைத்திருந்த எரிபொருள் கிடங்குகளையும் குறி வைத்து இந்தியப் படைகள் தாக்கின.
இதில் 22 பாகிஸ்தான் வீரர்கள் இறந்தனர். 62 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தனர். அந்த எரிபொருள்கிடங்குகளில் இன்னும் தீ எரிந்து கொண்டுள்ளது.
இதையடுத்து கூடுதல் பாகிஸ்தானிய படைகள் குவிக்கப்பட்டு ஆர்ட்டிலரி துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து நூற்றுக்கணக்கான இந்தியப் படைகளும் ஆர்ட்டிலரி தாக்குதலில் இறங்கினர்.
இதையடுத்து அந்தப் பகுதியில் எல்லா பக்கமும் குண்டுகள் சீறிப் பாய்ந்தவண்ணம் உள்ளன. இரவு முழுவதும்நடந்த துப்பாக்கிச் சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அப் பகுதியில் வசிக்கும் கிராமத்தினர் வீடுகளை விட்டுவிட்டு ஓட ஆரம்பித்துள்ளனர்.இவர்களை ராணுவம் தனது பாதுகாப்பில் பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications