எல்லையில் நிலைமை மிக மோசமடைந்துவிட்டது: பெர்னாண்டஸ்
இந்திய விமானப் படை விமானம்:
எல்லையில் நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும், இந்தியப் படைகளைக் குவிக்கும் பணி 2 தினங்களில்முடிவடைந்ைதுவிடும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
இரு நாட்களில் படைகள் குவிப்பு முடிந்துவிடும். அதன் பின்னர் எந்தத் தாக்குதலுக்கும் படைகள் தயாராகிவிடும்.தீவிரவாதிகள் மீது பாகிஸ்தானின் நடவடிகைகள் எப்படி உள்ளன என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு உடந்தையாக பாகிஸ்தான் செயல்பட்டால் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில்இறங்குவோம்.
டிசம்பர் 13 ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்த அடுத்த நாளே எல்லையில் தனது படைகளைபாகிஸ்தான குவிக்க ஆரம்பித்துவிட்டது. பாகிஸ்தான் ஏன் இந்த நடவடிக்கையில் இறங்கியது?. தவறு செய்ததால்தானே? ஆனால், நாம் மிகப் பொறுமையாக இருந்தோம். இப்போதும் பொறுமையாகத் தான்இருக்கிறோம்.
பாகிஸ்தானுக்கு எதிராக நாம் மிக நியாயமான நடவடிக்கைளில் இறங்கியுள்ளோம். இதை நம் நட்பு நாடுகளோ,எதிர்ப்பு நாடுகளோ தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.
முன்னதாக சியாச்சின், கார்கில், திராஸ் ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ள இந்திய வீரர்களை நேரில் சென்றுசந்தித்தார். அங்கு மைனஸ் 30 டிகிரி கடும் குளிரில் பனி மலைகளில் இந்த வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சியாச்சினில் வீரர்களுடன் சேர்ந்து கிருஸ்துமஸ் கொண்டாடிய பெர்னாண்டஸ், நான் முன்பு உறுதியளித்தது மாதிரிகிருஸ்துமஸ் கொண்டாட இங்கு வந்துவிட்டேன் என்றார்.
பாதுகாப்பு அமைச்சரான பின்னர் 21வது முறையாக பெர்னாண்டஸ் சியாச்சின் சென்றுள்ளார்.
பின்னர் பஞ்சாப், ராஜஸ்தான் எல்லையிலும் இந்தியப் படையினரை பெர்னாண்டஸ் சந்தித்தார்.
தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்திய வீரர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். கடைசி வீரனும் கடைசிகுண்டும் இருக்கும் வரை போராட்டம் தொடரும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications