வீரப்பன் காட்டுக்குள் பொது மக்கள் நுழைய தடை
கோயம்புத்தூர்:
வீரப்பன் நடமாடும் வனப்பகுதிகளுக்குள் பொது மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளாதாக தமிழகஅதிரடிப்படை டி.ஜி.பி. நடராஜன் கூறியுள்ளார்.
ராஜ்குமார் கடத்தலுக்கு பிறகு வீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக-கர்நாடக போலீசார் தீவிரமாகஈடுபட்டுள்ளனர். தமிழக அதிரடிப்படை போலீசார் தமிழக வனப்பகுதிகளில் முகாமிட்டு அவனை தேடும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக-கேரள எல்லைப் பகுதியான ஆனைக்கட்டி வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒருகும்பலுக்கும், அதிரடிப்படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சண்டையில் ஆதிவாசி கொல்லப்பட்டார். இந்த இடத்தைப் பார்வையிட வந்த அதிரடிப்படை கூடுதல் டி.ஜி.பி.நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,
வீரப்பன் இருக்கும் இடம் பற்றி அறிய கிராம மக்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். துப்பாக்கிசூட்டில் இறந்த ஆதிவாசிக்கும் வீரப்பனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மேலும் இதே வனப்பகுதியில் சந்தனக் கட்டைகளுடன் 4 பேர் பிடிபட்டுள்ளனர். எனவே இனி வீரப்பன் நடமாடும்வனப்பகுதிகளுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications