ஊட்டிக்கு கார் போக்குவரத்து தொடங்கியது, பஸ்களுக்கு தடை தொடர்கிறது
ஊட்டி:
ஊட்டியில் மழையினால் மலைப் பாதையில் சரிவு ஏற்பட்டதையடுத்து நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து இன்றுமீண்டும் தொடங்கியது. ஆனால், கார், வேன் போன்ற இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுவருகின்றன.
பஸ், லாரிகள் ஊட்டி செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரமடைந்ததால் பலத்த மழை பெய்தது. இந்தபலத்த மழைக்கு ஊட்டியும் தப்பவில்லை.
இங்கு பெய்த பலத்த மழையினால் சில தினங்களுக்கு முன் தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, ரயில்போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
சில தினங்களுக்கு பிறகு சாலைப் பகுதிகளிலும் நிலச்சரிவு காரணமாக பாறைகள் உருண்டு வந்து பாதையை மூடின.மேலும் மழையில் அடித்து வரப்பட்ட மணலும் குவிந்தது. இதனால், மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலைப்போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பாறைகள் வெடி வைத்துத்தகர்க்கப்பட்டன. மணல் புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலையில் இருந்து கார், வேன், ஜீப் போன்ற இலகு ரக வாகனங்கள் செல்லஅனுமதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலையை தயார்படுத்த இன்னும் சில நாட்கள்ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications