நாளை இந்தியா வருகிறார் டோனி பிளேர்: டெலிபோனில் புஷ்சுடன் ஆலோசனை
லண்டன்:
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்க இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் நாளை(வெள்ளிக்கிழமை) இந்தியா வரவுள்ளார். அவருடன் இன்று காலை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இதுகுறித்துடெலிபோனில் பேசினார்.
இதற்கிடையே எல்லைப் பகுதிகளில் இரு தரப்பிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல்,இந்திய-பாகிஸ்தான் படையினரிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது.
இந்தத் துப்பாக்கிச் சண்டை எந்த நேரத்திலும் போராக வெடிக்கும் என்ற சூழ்நிலையில், நாளை இந்தியாவுக்கு வரும்டோனி பிளேர், பிரதமர் வாஜ்பாயை சந்திக்கிறார். பிறகு 7ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார்.
இரு நாட்டு தலைவர்களிடமும் எல்லைப் பகுதிகளில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை குறைக்கபேச்சு வார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது. மேலும் இரண்டு நாடுகளும் திரும்பவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது.
இந்நிலையில் ஜார்ஜ் புஷ் இன்று காலை டோனி பிளேரை டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்திய-பாகிஸ்தான் மோதலைத் தவிர்ப்பது குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். இங்கிலாந்துபிரதமரிடம் சில யோசனைகளையும் புஷ் தெரிவித்தார். இந்த யோசனைகள் குறித்து இந்தியஸ பாகிஸ்தான்தலைவர்களுடன் டோனி பிளேர் பேசுவார்.
இந்தியா வரும் டோனி பிளேர் முதலில் பெங்களூர் வருகிறார். அங்கு நடக்கவுள்ள சாப்ட்வேர் தொடர்பானமாநாட்டில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications