பாகிஸ்தானுக்கு அவகாசம் தர முடியாது: பெர்னாண்டஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு மேலும் கால அவகாசம் தர வேண்டும் என்றுசொல்வது இன்னும் பல இந்திய மக்களைக் கொல்வதற்கு பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கு அவகாசம் தரச்சொல்வது மாதிரி என பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.

அவர் அளித்தப் பேட்டி:

தீவிரவாதிகள் நடவடிக்கை எடுங்கள் என்று பாகிஸ்தானிடம் சொல்வது தவறா? தீவிரவாதத்துக்கு எதிரான போரில்அமெரிக்காவுடன் இருப்பார்களாம். அதே நேரத்தில் இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்புவார்களாம். இதைஇந்தியா தட்டிக் கேட்டால், உலக சட்ட-திட்டங்களை எல்லாம் சுட்டிக் காட்டுவார்களாம்.

என் பதவியில் யார் இருந்தாலும், பிரதமர் வாஜ்பாயின் இடத்தில் யார் இருந்தாலும் இப்போது இந்தியா எடுத்துள்ளநிலையைத் தான் எடுத்திருப்பார்கள்.

பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாராக உள்ளது. இந்தியாவால் ராணுவ நடவடிக்கைஎடுக்க முடியாது என்றெல்லாம் சிலர் பேசுகிறார்கள். அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களால் என்னசெய்ய முடியும் என்பதை செயலில் காட்டுவோம்.

தீவிரவாத விவகாரத்தில் சில நாடுகள் இரட்டை நிலை எடுப்பதை இந்தியாவால் ஏற்க முடியாது.

ஒரு இடத்தில் தீவிரவாதிகள் தாக்கியதற்காக அமெரிக்கா ஒரு அணி அமைத்து தாக்குதல் நடத்துகிறது. இந்த அணிஇந்தியாவைத் தாக்கும் தீவிரவாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாமா?.

இவ்வாறு பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+