இளங்கோவனுக்கு எதிராக காங்கிரசில் போர்க் கொடி: டெல்லி கூட்டம் பாதியிலேயே நிறுத்தம்
டெல்லி:
காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவனை பதவியில் இருந்து நீக்கக் கோரி காங்கிரஸ் காரர்கள் கோஷம்எழுப்பியதால் காங்கிரஸ் தேர்தல் ஆய்வுக் கூட்டம் பாதியிலியே நின்று விட்டது.
வரும் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது பற்றி ஆலோசிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களை அவசரமாக அழைத்தார்.
முன்னதாக நேற்று (சனிக்கிழமை) அகில இந்திய பொது செயலாளர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில் தமிழககாங்கிரஸ் தலைவர்களுடனான தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன், சட்டசபை தலைவர் யசோதா மற்றும் முக்கியமானதலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இளங்கோவன் நீக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை குறித்து மட்டுமே பேசவேண்டும்.தேர்தல் பற்றி இப்போது பேசக்கூடாது. இளங்கோவனை வைத்துக் கொண்டு இடைத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று இளங்கோவன் அதிருப்தியாளர்கள் கூறினார்.
இளங்கோவனை உடனடியாக நீக்க வேண்டும், இல்லாவிட்டால் நாஙகள் கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கிக்கொள்வோம். அவரை நீக்கி விட்டு யாரை வேண்டுமானாலும் தலைவராக தேர்ந்தெடுங்கள்.
புதிய தலைவருக்கு எதிராக யாராவது குரல் கொடுத்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கும்சம்மதிக்கிறோம் என்று குறிப்பிட்டு அனைவரும் கையெழுத்திட்ட தீர்மானத்தை சமர்ப்பித்தனர்.
கதறி அழுதார் யசோதா
தான் தலித் வகுப்பை சேர்ந்தவள் என்பதால் என்னை அவமானப்படுத்துகிறார் இளங்கோவன். நான்ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக் கொண்டு அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக இளங்கோவன் கூறுகிறார்என்றார் யசோதா.
தனது கழுத்தில் இருந்த நகையைக் கழற்றி டேபிள் மீது போட்டு, இதுவும் கூட ஜெயலலிதா வாங்கிக் கொடுத்ததாககூறி என்னை கேவலப்படுத்துவார் என்று கூறி அவர் கதறி அழுதார்.
ரமேஷ் சென்னிதாலா அவரை சிரமப்பட்டு சமாதானப்படுத்தினார். இதனால் இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும்எடுக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) சோனியாகாந்தியை சந்தித்து, இளங்கோவனை நீக்குமாறு அதிருப்தியாளர்கள்கோரிக்கை வைக்க உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications