பிரதமருக்கு இணையான பாதுகாப்பு பெறுகிறார் அத்வானி
டெல்லி:
பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானிக்குத் தொடர்ந்து கொலைமிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதால் அவருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு மத்திய அமைச்சருக்கு இதுபோன்ற பாதுகாப்பு அதிகரிக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.
பாகிஸ்தானின் உளவுப் படையான ஐ.எஸ்.ஐ. உதவியோடு சதித் திட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும்தீவிரவாதிகளின் பல வயர்லெஸ் செய்திகளைக் கேட்டபோது, அவர்கள் அத்வானியைத்தான் தற்போது குறிவைத்திருப்பது தெரிய வந்தது.
தற்கொலைப் படையினரின் உதவியோடுதான் அத்வானியைக் கொல்லப் போவதாகவும் அவர்கள்திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து அத்வானிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே அத்வானிக்குஇந்தக் கறுப்புப் பூனைப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுதான் வந்தது. தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் டெல்லி போலீசாரின் சிறப்பு கமாண்டோக்கள்தான் அத்வானிக்குப் பாதுகாப்பளித்து வந்தனர்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பையடுத்து, அத்வானியின் வாகனம் செல்லும் பகுதிகளில் சாலைப்போக்குவரத்து நிறுத்தப்படும். அவர் செல்லும் சாலையின் இரு புறங்களிலும் பாதுகாப்புப் படையினர்நிறுத்தப்படுவார்கள்.
அத்வானியின் வீட்டைச் சுற்றிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும்அவருடைய வீடு உள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் போலீஸ் வாகனம் ரோந்து சென்றுகொண்டே இருக்கும்.
தீவிரவாதத்துக்கு விரைவில் முற்றுப் புள்ளி:
இதற்கிடையே இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகுதான் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதையே உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன என்று அத்வானி கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு 6 நாள் பயணமாகக் கிளம்புவதற்கு முன் நிருபர்களிடம் பேசுகையில் அத்வானி இவ்வாறுதெரிவித்தார்.
அனைவரும் கூடி தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற சார்க் மாநாட்டின் தீர்மானத்தை வரவேற்றஅத்வானி, ஆனாலும் பாகிஸ்தான் இன்னும் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் குறைகூறினார்.
நம்மை (இந்தியாவை) அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள், பாகிஸ்தான் தன்நிலையை இன்னும் மாற்றிக் கொள்ளாதது பற்றியும் சிந்திக்க வேண்டும் என்றும் அத்வானி சற்று கோபத்துடன்கூறினார்.
அமெரிக்காவும் இங்கிலாந்தும்தான் நம்மை அமைதியாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து நம் மீது மற்றொரு போர் திணிக்கப்பட்டுள்ளது என்ற அத்வானி, இந்தப்போர் தவிர்க்கப்பட முடியாதது என்றும் கூறினார்.
தீவிரவாதத்தை இந்தியா தனியாகவே எதிர்கொள்ளும். நமக்கு எந்த நாட்டின் உதவியும் தேவைப்படவில்லை.இனியும் தேவைப்படாது என்பதை மீண்டும் உறுதியாகக் கூறினார் அத்வானி.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமெரிக்கா செல்லும் அத்வானி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்காலின் பாவெல் மற்றும் அட்டர்னி ஜெனரல் ஜான் அஷ்ராப்ட் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
ஆனால் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்திப்பது பற்றி இன்னும் உறுதியாக முடிவு செய்யப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications