வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த போலி டாக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெளிநாட்டில் நர்ஸ், என்ஜினியர், ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.22 கோடி வசூலித்துதலைமறைவான போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் திருச்சூரையடுத்த பழையனூரைச் சேர்ந்த, எம்.டெக். பட்டதாரியானராஜன் (எ) நடராஜன் 10ஆணடுகளுக்கு சென்னை தாம்பரத்தில் வந்து குடியேறினார். ஆனால், தன்னை டாக்டர் என்றே அனைவரிடமும்கூறியுள்ளார்.

அப்பகுதியில் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பிறகு சில மாதம் கழித்து தனியாகவசித்து வந்தார். பிறகு கணவரை பிரிந்து வாழும் ராணிஜோஸ் (50) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் சென்னை அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள குமார் (35) என்பவரிடம் அவருக்கு நட்புஏற்பட்டது. அப்போது அங்கு உள்ள பூஜா (30) என்பவரை காதலிக்க தொடங்கினார்.

தான் அமெரிக்காவில் டாக்டராக பணி புரிந்திருப்பதாகவும், வெளிநாட்டில் பல நண்பர்கள் இருப்பதால் ஆட்களைவேலைக்கு தேர்வு செய்து அனுப்பும் தொழில் செய்யலாம் என்று கூறி குமாருடன் சேர்ந்து பத்திரிக்கையில்விளம்பரம் கொடுத்துள்ளார்.

இதனால் பல மாநிலங்களிலிருந்தும் அவரை தொடர்பு கொண்டு ஆளுக்கு ரூ.1 லட்சம் வீதம் 206 பேர்கொடுத்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட அனைவரையும் சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு நட்சத்திரஹோட்டலில் 2 நாள் பயிற்சி வகுப்பு கொடுத்தார்.

நர்ஸ் வேலைக்கு பயிற்சி கொடுக்கும்போது டாக்டர் போல வேடம் போட்டு அவரே பயிற்சி வகுப்பு எடுத்துள்ளார்.அதே போல் என்ஜினியராகவும், போராசிரியராகவும் நடித்து அவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்துள்ளார்.

பயிற்சி வகுப்பு முடிந்து அனைவரையும் கடந்த ஜூலை 17ம் தேதி ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்துஅனைவரது பாஸ்போர்ட்டையும் வாங்கிக்கொண்டு ராஜனும், குமாரும் தலைமறைவாகி விட்டனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அன்றே குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

போலீசார் விசாரணை நடத்தி குமார் மற்றும் பூஜா ஆகியோரைக் கைது செய்தனர். ராஜனும், ராணிஜோஸும்சிம்லாவுக்கு சென்று தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில்தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கிருஸ்துமசுக்காக கேரளம் செல்ல விரும்பிய ராணியை ராஜன் அனுப்பி வைத்துள்ளார். ராணிகேரளா வந்திருப்பதை அறிந்த போலீசார் கடந்த 28ம் தேதி கேரளத்தில் கைது செய்தனர்.

பின்னர் அவரை வைத்தே ராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகம் வருமாறு போலீசார்அழைத்தனர். ஆனால் அவர் அங்கு வராமல் விஜயவாடாவுக்கு ராணியை சந்திக்க வருவதாகக் கூறியுள்ளார்.ஆனால் அங்கும் போலீசாரிடமிருந்து தப்பி விட்டார்.

ராணி மட்டும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருக்கும் மனைவியைப்பார்க்க ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த ராஜனை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், ரூ.2 லட்சம் பணம், 33 பவுன் நகைகளை போலீசார்கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து பேலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+