பெங்களூரில் கைத்துப்பாக்கி விற்ற தமிழர் உள்பட 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கைத்துப்பாக்கி விற்றதாக கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் உட்பட 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கைத்துப்பாக்கி விற்கப்படுவதாக அல்சூர் கேட் பாாேலீஸ்இன்ஸ்பெக்டருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து மப்டியில் மாநகராட்சி வளாகத்துக்குச் சென்ற போலீசார், துப்பாக்கி விற்க முயற்சி செய்த இரண்டுபேரை கைது செய்தனர். இதில் ஒருவர் பெங்களூரில் உள்ள பென்டகானஹள்ளியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி(35). இவர் சொந்த ஊர் கிருஷ்ணகிரி.

கைதான மற்றொருவர் கோலார் மாவட்டம் பிரசஹள்ளியைச் சேர்ந்த ஜங்கம்மய்யா (27). இவர்களிடம் இருந்துமூன்று கைத்துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் இருவரும் ஆந்திரா எல்லைப்பகுதியில் நஞ்சுண்ட கவுடா தலைமையில் இயங்கும் நக்ஸலைட்இயக்கத்தின் உறுப்பினர்கள். சில மாதங்களுக்கு முன் கோலார் அருகே நடந்த பஸ் கொள்ளையில் இவர்கள்சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் சிக்கபல்லாபூர் அருகே தங்க நகை டீலரை மிரட்டி பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகொள்ளை, கோலார் மாவட்டத்தில் உள்ல பல்வேறு தொழிற்சாலைகளில் நடந்த கொள்ளை ஆகியவற்றிலும்இவர்களுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+