சென்னை-டெல்லி ரயிலில் டைம்-பாம்: பெரும் விபத்து தவிர்ப்பு
சென்னை:
சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயிலில் டைம்-பாம் ரக வெடிகுண்டுகண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னையிலிருந்து கிளம்பிய அந்த ரயில் கடந்த 3ம் தேதி இரவு ஜான்சியை அடைந்தது. பின்னர் அங்கிருந்துகிளம்பிய அந்த ரயிலின் ஒரு பெட்டியில் 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருந்தனர்.
இவர்களில் ஒரு வீரர் கழிப்பறைக்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு பார்சலைக் கண்டார்.
அந்தப் பார்சலிலிருந்து "டிக் டிக்" என்று வந்து கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்துப் பதட்டத்துடன் வெளியே ஓடிவந்த அந்த ராணுவ வீரர் மற்ற வீரர்களிடம் கூறினார். அவர்களும்ஓடிச் சென்று அந்த மர்ம பார்சலைப் பார்த்தனர்.
பின்னர் அவர்கள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில்வே போலீசாருக்குத் தகவல்பறந்தது.
விரைந்து வந்த போலீசார், குறிப்பிட்ட அந்த ரயில் பெட்டியிலிருந்த பயணிகளை இறக்கிவிட்டு, அந்தப் பெட்டியைமட்டும் தனியாகக் கழற்றி யார்டுக்குக் கொண்டு சென்றனர்.
இதற்கிடையே தகவல் கிடைத்து விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பார்சலைச் சோதனை செய்தனர்.
அப்போது அந்தப் பார்சலில் டைம்-பாம் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பரபரப்பாகச் செயல்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், பார்சலை ரயில் பெட்டியிலிருந்து அகற்றிடைம்-பாமை செயலிழக்கச் செய்தனர்.
வெடிகுண்டுடன் கடிகாரம் அரைகுறையாக இணைக்கப்பட்டிருந்தது. இது மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுஎன்றும் வெடித்திருந்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ வீரர்கள் பயணம் செய்தபெட்டியாதலால், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள்தான் இந்த டைம்-பாமை வைத்திருக்கக் கூடும் என்றுபோலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னையில் வந்து போகும் ரயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குஇடமான பார்சல்கள் கடுமையாக சோதிக்கப்படுகின்றன.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications