இந்தியா வந்தார் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிமன் பெரஸ் 2 நாள் பயணமாக இன்று (திங்கள்கிழமை) இந்தியா வந்துசேர்ந்தார்.
தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் கூட்டாகச் சேர்ந்து போராடுவது பற்றியும் அவர் பேசவுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்தும் இரு நாடுகளும் பேசவுள்ளன. இஸ்ரேலிடமிருந்து பல்வேறு ரகபோர் விமானங்களை இந்தியா வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்பட பல தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளார் பெரஸ்.
முன்னதாக இஸ்ரேலிலிருந்து கிளம்புவதற்கு முன் நிருபர்களிடம் பேசிய பெரஸ், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபையில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஆதரிப்பதாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications