சேலம் சிறையில் 4 கைதிகள் ஒரு வாரமாக உண்ணாவிரதம்
சேலம்:
சேலம் மத்திய சிறையில் 4 கைதிகள் தொடர்ந்து 7 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் மூக்கன், கணேசன், முருகன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுடன் ஒரு வழக்கு தொடர்பாக ரத்தினவேல் பாண்டியன் என்பவரும் அதே சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு இவர்கள் நான்கு பேரும் சிறைக்குள் ஜாதி கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக எழுந்த புகாரையடுத்து,இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
டிசம்பர் 31ம் தேதி, இவர்கள் தங்களை மீண்டும் பாளையங்கோட்டைக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதத்தைதொடங்கினர். சிறைத்துறை அதிகாரிகள் அந்த கைதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் போலீசின் பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். இதனால் அவர்கள் மீது சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
உண்ணாவிரதத்தின் ஆறாவது நாளான கடந்த சனிக்கிழமை அவர்கள் உடல் நிலை மோசமானது. அதனால் சிறைஅதிகாரிகள் மருத்துவ சிகிச்சையை அவர்களை மேற்கொள்ளும்படி பேசிப் பார்த்தனர்.
ஆனால் அவர்கள் அதற்கு உடன்படாமல், சிகிச்சை அளித்தால் தாங்களே காயப்படுத்திக் கொள்வோம் என்றுகூறிவிட்டனர்.
சாப்பிட்டு 7 நாட்கள் ஆகிவிட்டதால் இவர்களில் மூக்கன், பாண்டியன் இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)மயங்கி விழுந்தனர். இதனால் அவர்கள் இருவரும் சேலம் மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் கூட்டிச்செல்லப்பட்டனர்.
நான்கு கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் சேலம் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications