மதுரையில் ஈவ் டீசிங்: கல்லூரி மாணவர்கள் கைது
மதுரை:
பெண்களை கேலி செய்த மதுரை யாதவா ஆடவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களைப் போலீஸார் கைதுசெய்தனர்.
மதுரை திருப்பாலையில் யாதவா ஆடவர் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் பெரியார்பஸ் நிலையத்திலிருந்து கல்லூரிக்குச் செல்வதற்காக சத்திரப்பட்டி செல்லும் சிட்டி பஸ்சில் பயணம் செய்தனர்.
பஸ்சில் பயணம் செய்த இளம் பெண்களை கேலி செய்தவாறு அவர்கள் பயணித்துள்ளனர். அதே பஸ்சில் உமாஎன்ற பெண் போலீஸும் பயணம் செய்தார்.
மாணவர்களின் சேஷ்டைகள் அதிகரித்துக் கொண்டே போவதைப் பார்த்த அவர் டிரைவரிடம் சென்று பஸ்சைஎங்கும் நிறுத்தாமல் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
டிரைவரும் இதற்காகவே காத்துக் கொண்டிருந்தார். ஒரு மாணவியின் சிக்னல் கிடைத்தவுடன் பஸ்சை படுவேகமாகஓட்டிச் சென்று தல்லாகுளம் காவல் நிலையத்தில் நிறுத்தினார்.
பின்னர் பயணிகள் உதவியுடன் கலாட்டா செய்த மாணவர்களை போலீஸ்காரர் உமா, இழுத்துச் சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த செய்தி யாதவா கல்லூரிக்குப் பரவியது. இதையடுத்து மாணவர்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தவழியாகச் சென்ற பஸ்களை தடுத்து நிறுத்தி கைப்பற்றிக் கொண்டனர்.
உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர். தவறு செய்ததால்தான் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணைக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என்று உறுதி மொழி கூறிய பின் மாணவர்கள் தங்களதுபோராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications