நீலகிரியில் பொது இடங்களில் குப்பை கொட்ட தடை
Subscribe to Oneindia Tamil
நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் கண்ட இடத்தில் குப்பை, கழிவுப்பொருட்களைக் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சுப்ரியா சாஹு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு கண்ட இடங்களில் குப்பைகள், பிளாஸ்டிக்பொருட்கள், கழிவுப் பொருட்களைக் கொட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீடு, வீடாக வந்து குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரிக்கும் புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம்தான் குப்பைகள், கழிவுப் பொருட்களைக் கொடுக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார் சுப்ரியா.












Click it and Unblock the Notifications