மதுரையில் கள்ள நோட்டுக்கள் புழக்கம்: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் 50 ரூபாய் கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மேலூர் பகுதியில் 2 பேர் கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு வருவதாக போலீசாருக்குத்தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மேலூருக்கு விரைந்தனர்.
அங்கு தும்பைப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா, சூரக்குண்டு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி ஆகிய இருவரும் 50ரூபாய் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 60 ஐம்பது ரூபாய் கள்ள நோட்டுக்களைப்பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications