ஊட்டி சாலையில் போக்குவரத்து தொடங்கியது
ஊட்டி:
மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் இரு வழிகளிலும் இலகு ரக வாகனங்கள்அனுமதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவுஏற்பட்டது. மேலும் குறும்பாடி பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. நிலச்சரிவால்பழுதடைந்த பகுதிகளை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தில் ஊட்டிக்கு வாகனப் போக்குவரத்து துவங்கியது. முதலில்மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு ஒரு வழிப்பாதையாக இலகு ரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
நான்கு நாட்கள் மேற்கொண்ட ஆய்வுப்பணியில் பிரச்சனைகள் இல்லாததால் இன்று முதல் இரு வழிப்பாதையிலும்இலகு ரக வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட உள்ளது.
இந்த போக்குவரத்து வரும் 15ம் தேதி வரை தொடரும். இதன் பின்னர் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு கனரகவாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications