ஜெ. விடுதலையை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி மீண்டும் வழக்கு
டெல்லி:
தமிழக முதல்வராவது உள்பட முக்கியப் பொறுப்புக்களை ஏற்பதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம்சுவாமி.
டான்சி மற்றும் கொடைக்கானல் ஹோட்டல் வழக்குகளில் ஜெயலலிதாவை விடுவித்து உயர் நீதிமன்றம்தீர்ப்பளித்தது. இதனால் அவர் தேர்தலில் நின்று முதல்வராக இருந்த தடை நீங்கியது.
அவரும் வரும் இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்று முதல்வராகும் எண்ணத்தில் உள்ளார். ஆனால்இதைத் தடுக்கும் வகையில் சுப்பிரமணியம் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
டான்சி நிலம் அரசுக்கு சொந்தமானது அல்ல என்று தீர்ப்பு கூறியதன் மூலம், உயர் நீதிமன்றம் தவறான தீர்ப்பைவழங்கி விட்டது. அதே போல் ஜெயலலிதா டான்சி நிலத்தில் வாங்கியதில் எந்த முறைகேடும் இல்லை என்று தீர்ப்புவழங்கியுள்ளது.
ஆனால் அவருடைய பங்குதாரர்களுடனும், அந்த நிலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் சேர்ந்து சதித்திட்டம்தீட்டித்தான் குறைவான விலைக்கு அந்த அரசு நிலத்தை ஜெயலலிதா வாங்கியுள்ளார். அதனால் அரசுக்கு ரூ.3.50கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து, ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அவர்முதல்வராகி அரசு சொத்துக்களும், தமிழகத்துக்கும் பெரும் கேடு விளைவிப்பார் என்று அஞ்சப்படுகிறது.
அதனால் இந்த மேல் முறையீட்டின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் வரை ஜெயலலிதா எந்த அரசுப் பதவியும்வகிக்கக் கூடாது என்று உத்தரவிடுமாறு அந்த மனுவில் கூறியுள்ளார் சுவாமி.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications