"ஊட்டியின் தந்தை"க்கு ஒரு நினைவிடம்
ஊட்டி:
ஊட்டியை நிர்மாணித்தவரான சர். ஜான் சல்லீவன் வாழ்ந்த இல்லம் நினைவிடமாக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் மலை நகரம், மலைகளின் ராணி என்று அழைக்கப்படுவதுமான ஊட்டி,ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நகரமாகும்.
இந்த நகரை அப்போதைய நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சர். ஜான்சல்லீவன் என்பவர் கடுமையானமுயற்சிகளுக்குப் பிறகு ஊட்டி என்ற அழகிய மலைவாசஸ்தலத்தை உருவாக்கினார்.
ஓய்வு எடுப்பதற்காக இந்த நகரை அப்போது அவர் உருவாக்கினாலும் கூட பின்னர் அது மிகப் பெரும் சுற்றுலாஸ்தலமாக மாறியது. சல்லீவன் வாழ்ந்த இல்லம் கண்ணேரி மூக்கன் என்ற இடத்தில் பாழடைந்த நிலையில் இருந்துவந்தது.
இதை சரி செய்து, நினைவிடமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வந்தது.
தற்போது சல்லீவன் இல்லம் மராமத்து செய்யப்பட்டு, நினைவிடமாக்கப்பட்டு விட்டது. வருகிற சனிக்கிழமை முதல்இந்த நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படுகிறது.
இங்கு சல்லீவனை நனைவு கூரும் வகையில் புகைப்படக் கண்காட்சிகள், அவர் பயன்படுத்திய பொருட்கள்,ஊட்டியின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்ரியா சாஹு இத்தகவலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications