ராஜ்யசபா எம்.பியாக மைத்ரேயன் தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை:
அதிமுகவைச் சேர்ந்த டாக்டர் வி. மைத்ரேயன் ராஜ்ய சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று இன்று(வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.
தமாகா தலைவர் மூப்பனார் மறைவையடுத்து காலியான இந்த எம்.பி. சீட்டுக்கு வரும் 17ம் தேதி தேர்தல் நடக்கஇருந்தது.
தந்தையின் இந்த எம்.பி. சீட்டைத் தானே தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்த தற்போதையதமாகா தலைவர் ஜி.கே. வாசன் எண்ணத்தில் மண் விழுந்தது.
தமிழகத்தில் அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்ட அதிமுகவே இந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று ஜெயலலிதாஅறிவித்த பிறகு, தன் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் வாசன்.
இந்த எம்.பி. சீட்டுக்காக அதிமுகவின் மைத்ரேயனைத் தவிர யாரும் போட்டியிடவில்லை.
மைத்ரேயனைத் தவிர டாக்டர் பத்மராஜன் என்பவர் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவர் டெபாசிட்கட்டவில்லை. அவர் பெயரை யாரும் முன் மொழியவும் இல்லை. இதனால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து மைத்ரேயனே போட்டியின்றி ராஜ்யசபா எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுக்களை வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, மைத்ரேயன் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டசபைச்செயலாளரும் இடைத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியுமான வி. ராஜாராமன் அறிவித்தார்.
முன்பு பாஜகவில் இருந்த டாக்டர் மைத்ரேயன் ஒரு புற்றுநோய் மருத்துவர் ஆவார். கடந்த 2 ஆண்டுகளுக்குமுன்புதான் அவர் அதிமுகவில் சேர்ந்தார்.
கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்மைத்ரேயன்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications