11 தமிழக மீனவர்கள் மாலத்தீவு சிறையில் அடைப்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள், இந்திய கடற்பகுதியைத் தாண்டி மீன் பிடித்ததால் மாலத்தீவுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த வின்சென்ட் மகன் ஆல்பர்ட். இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரதுமகன் பிதாலியேஸ் (52), சின்னத்துறை கிளீட்டஸ் (36), பிராங்ளின் (28), சுனில் (21), ராஜேஸ் (21), வின்சென்ட்(18), பூத்துறை கூக்லின் (21), சூசை நாயகம் (19), எலியாஸ் (24), அந்தோணியார் பிச்சை (39), ஜான் நாயகம் (18)ஆகிய 11 மீனவர்கள் மீன் பிடிக்க லட்சத்தீவு பகுதிக்கு சென்றனர்.
அவர்கள் லட்சத்தீவு அருகே மினிகாய் என்ற தீவின் அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போதுமாலத்தீவு கடற்படையினர் அந்த மீனவர்களையும், விசைப்படகையும் பிடித்துச் சென்றனர்.
இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, அவர்களை மாலத்தீவுச் சிறையில் அடைத்தனர்.தகவல் கிடைத்ததும் ஆல்பர்ட் நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
மேலும் மீன்பிடி தொழிலாளர் சங்க முக்கிய காரியதசி வின்சென்ட் ஜெயன், பிரதமர், ஜனாதிபதி, தமிழக முதல்வர்,மீன்வளத்துறை அமைச்சர், குமரி மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோருக்கு தகவல்கொடுத்துள்ளனர்.
மாலத்தீவில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிப்பது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications