ராமேஸ்வரத்தில் 65 குடிசைகள் தீயில் எரிந்து நாசம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் உள்ள மீனவக்குப்பத்தில் தீப்பிடித்ததால் 65 குடிசைகள் எரிந்து, ரூ.20 லட்சம் மதிப்புள்ளபொருட்கள் சேதடைந்தன.
ராமேஸ்வரம் அருகே ஏர்க்கோடு மீன் பிடித் துறைமுகத்தில் திடீரென்று ஒரு குடிசையில் தீப்பிடித்தது. காற்றுபலமாக வீசியதால் தீ படிப்படியாக அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியது.
உடனே ராமேஸ்வரம், மண்டபம், ராமநாதபுரத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கும்பணியில் இறங்கியது. 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 65 குடிசைகளும் தீயில் கருகி சாம்பலாகின. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவுமில்லை. ஆனால்குடிசைகளில் வைத்திருந்த மீன்பிடிக்கும் வலைகள், விசைப் படகுக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும்தீயில் கருகின.
இதனால் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியுள்ளன. இந்த பகுதியை தொழிலாளர் துறைஅமைச்சர் அன்வர் ராஜாநேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ.2,000 பணம்வழங்க உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களும், சமையல் பொருட்களும் வழங்கினர். ராமேஸ்வரம்போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications