போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர்களான 2 பேர் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த 2 பேர் தலைமறைவாகினர்.

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் உள்ள ஆவணியாபுரம் பள்ளி ஒன்றில் நெல்லையைச் சேர்ந்த அன்சாரி,வேலூரைச் சேர்ந்த அமீனாவும் 1998ம் ஆண்டு போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

சமீபத்தில் இவர்கள் மேற்படிப்பு படிப்பதால், தங்களது சான்றிதழை கொடுக்குமாறு பள்ளி நிர்வாகித்திடம்கேட்டுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகமோ சான்றிதழ்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும், சான்றிதழ்கள் போலி சான்றிதழ் என்று கண்டுபிடித்து விட்டதாக பயந்துதலைமறைவாகி விட்டனர்.

இவர்களில் அன்சாரி என்பவர் சமீபத்தில் வங்கியில் ரூ.40,000 கடன் வாங்கியுள்ளார். அதற்கு ஜாமீனாக 4ஆசிரியர்கள் கையெழுத்து போட்டுள்ளனர்.

இந்த 4 ஆசிரியர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த செய்தி கும்பகோணம் பகுதி ஆசிரியர்களிடையேயும் மக்களிடேயேயும் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+