காஷ்மீரில் 2 ஹாலந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தில் 2 ஹாலந்து தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரில் உள்ள தல் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் மீது 2 தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். எல்லைப் பாதுகாப்புப் படையினரைக்கத்தியால் குத்திவிட்டு அவர்களுடைய துப்பாக்கிகளைக் கைப்பற்றவும் அந்தத் தீவிரவாதிகள் முயற்சித்துள்ளனர்.

ஆனால் உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் அந்த 2தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட அந்த 2 பேரும் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பது தெரிய வந்தது.

எல் பாகியோவ்லி அகமது மற்றும் எல் ஹாஸ்நோவி காலிக் ஆகிய இந்த 2 பேரும் கடந்த டிசம்பர் 26ம் தேதிஆம்ஸ்டர்டாமிலிருந்து அம்மான் வழியாக டெல்லி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து சில கிரெடிட் கார்டுகளும், 2 செல் போன்களும், ஒரு திசை காட்டும் கருவியும், வேறு சிலஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+