50 அடி பள்ளத்தில் விழுந்து 15 வயது யானை சாவு
ஈரோடு:
அந்தியூர் காட்டில் 15 வயது பெண் யானை ஒன்று 50 அடி பள்ளத்தில் சறுக்கி விழுந்து இறந்தது.
அந்தியூர் வனப்பகுதியில் உழுக்குத்திமேடு என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் சில தினங்களாக யானைகள்நடமாட்டம் அதிகமாகவே இருந்து வந்தது.
யானைக் கூட்டத்திலிருந்து பெண் யானை ஒன்று மலைச்சரிவான பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த யானைக்கு கால் சறுக்கியது. மலைச்சரிவிலிருந்து ஐம்பது அடி பள்ளத்தில்பயங்கர பிளிறல் சத்தத்துடன் விழுந்தது.
காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிறுந்த வனக்காப்பாளர்கள் ராமராஜ், அழகேஷ் ஆகியோர் யானையின் பிளிறல்சத்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்தனர்.
அவர்கள் வெள்ளித்திருப்பூர் கால்நடை மருத்துவ அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளத்தில் விழுந்தயானைக்கு மருத்துவ முதலுதவு வழங்க வனத்துறையினரும், கால்நடை மருத்துவரும் சென்று பார்த்த போது அந்தயானை இறந்து கிடந்தது தெரிந்தது.
பள்ளத்தில் விழுந்து கால் ஒடிந்த நிலையில் இறந்திருந்த அந்த யானையை பிரேத பரிசோதனை செய்து பின்புதைத்தனர்.












Click it and Unblock the Notifications