பேச்சு நடத்த தமிழ்நாடு தான் தகுந்த இடம்: புலிகள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

நார்வே குழுவினருடன் பேச்சு நடத்த தமிழ்நாடு தான் பொருத்தமான இடம் என்று விடுதலைப் புலிகள்அறிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் இயக்க ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் தமிழ் இணைய தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது:

இலங்கையுடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சரியான இடம் தென்னிந்தியா (தமிழ்நாடு)தான். அங்கு நார்வேகுழுவினருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த நல்ல வாய்ப்புக்கள் உள்ளன.

இங்கு இருதரப்பு தலைவர்களும் அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவும் நேருக்கு நேர்ஆலோசனைகளை நடத்தவும் குழுக்கள் மூலம் பேச்சு நடத்தவும் வசதிகள் உள்ளன என்று பாலசிங்கம் கூறியுள்ளார்.

இந்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள வன்னிநகரிலுள்ள மது என்ற இடத்தை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தகுதியான இடம் என்று இலங்கை அரசு கருதுகிறது.

பிரதமர் விக்கிரமசிங்கேயும் பூர்வாங்க பேச்சு நடத்த இந்த இடம் பொருத்தமானது என்று நம்பிக்கைதெரிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள சண்டே டைம்ஸ் என்ற பத்திரிக்கை கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+