டான்சி வழக்கு: அப்பீல் மீது வரும் 18ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி:
டான்சி வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவின் மீது வரும் 18ம் தேதி விசாரணக்கு வருகிறது.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் இருந்து ஜெயலலிதா உட்பட அனைவரையும் கடந்த டிசம்பர் 4ம் தேதி சென்னைஉயர் நீதிமன்றம் விடுதலை அளித்து தீர்ப்பளித்தது.
இதனால் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இருந்த தடை விலகியது. அதனால் அவரும் ஆண்டிப்பட்டிதொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆர்.எஸ். பாரதி என்பவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இவர் தான் டான்சி வழக்கின் முதல் புகார்தாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும் டான்சி வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்தார்.
இந்நிலையில் பாரதியால் மேல் முறையீடு செய்யப்பட்ட டான்சி நில பேர ஊழல் வழக்கு வரும் 18ம் தேதிவிசாரணைக்கு வருகிறது.
அப்போதுதான் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளுமா, அல்லது தள்ளுபடி செய்யுமாஎன்று அறிவிக்கப்படும்.
சுப்பிரமணியம் சுவாமியின் மனு 21ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications