அரசியலில் குதித்தார் ப. சிதம்பரத்தின் மகன்
மதுரை:
முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைக் கட்சியின் தலைவருமான ப. சிதம்பரத்தின் மகன்கார்த்திக் சிதம்பரம் மதுரையில் இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் கொடியை ஏற்றியதன் வாயிலாகஅரசியலுக்குள் புகுந்துள்ளார்.
சிதம்பரம் தமாகாவிலிருந்து பிரிந்து வந்து தனியாக காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையைத் தொடங்கினார். சிலநாட்களுக்கு முன்பு தனது கட்சிக்கு புதிய கொடி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரமும் அரசியல் களத்தில் குதித்து விட்டார். மதுரைக்கு வந்தகார்த்திக்குக்கு விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் மதுரையில் உள்ள வில்லாபுரம், மதிச்சியம் உள்பட 4 இடங்களில் நடைபெற்ற கட்சிக் கூட்டங்களில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து கார்த்திக் பேசினார்.
சுய மரியாதை, நேர்மையான ஆட்சி மற்றும் தனித்தன்மை ஆகியவற்றைத்தான் இந்தக் கொடியில் உள்ள 3நட்சத்திரங்களும் சுட்டிக் காட்டுகின்றன என்று கூட்டத்தில் பேசிய கார்த்திக், கட்சியின் வளர்ச்சிக்கு அனைவரும்கடுமையாக உழைக்க வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார்.
பின்னர் அவர் தன்னுடைய சொந்த ஊரான சிவகங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications