ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தலா? - கருணாநிதி எரிச்சல்
சென்னை:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி இடைத் தேர்தலை ரத்து செய்து விட்டு, ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தல்நடத்துவதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சாைதாப்பேட்டை, வாணியம்பாடித் தொகுதிகளில் வாக்காளர்கள் சேர்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அத்தொகுதிகளில் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் நேற்று (செவ்வாய்க்கிழமை)அறிவித்தது.
ஆனால் ஆண்டிப்பட்டியில் மட்டும் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்குதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி கருணாநிதி சென்னையில் நிருபர்களிடம் நேற்று மாலைகூறியதாவது:
இரண்டு தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்து விட்டு ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தலை நடத்துவதை எங்களால்பொறுத்துக் கொள்ள முடியாது.
அதிமுகவின் அனைத்துக் குண்டர்களையும், போலீஸ் படையையும் ஆண்டிப்பட்டியில் குவித்து, தேர்தல்கமிஷனின் உதவியோடு அராஜகத் தேர்தலை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.
இது குறித்து விவாதிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்றுமாலை நடைபெறும் என்று கருணாநிதி கூறினார்.
இளங்கோவனும் பாய்ச்சல்:
இதற்கிடையே ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தலை நடத்துவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும்ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாக்காளர் பட்டியலில் மற்ற இரண்டு தொகுதிகளை விட ஆண்டிப்பட்டி தொகுதியில் தான் அதிக அளவு புகார்கள்எழுப்பப்பட்டதை மக்கள் அறிவர். ஆண்டிப்பட்டியில் புகார் பற்றி விசாரிக்க சென்ற தேர்தல் கமிஷன் அதிகாரிதுரத்தியடிக்கப்பட்டார்.
மேலும் அங்கு தேர்தல் விதிமுறைகள் பகிரங்கமாக மீறப்பட்டுள்ளது எல்லோருக்கும் தெரியும். எனவேஆண்டிப்பட்டியில் மட்டும் யாருக்காக தேர்தல் நடத்தப்படுகிறது? எந்த கட்சியின் அவசரத்துக்காக,அவசியத்துக்காக நடத்தப்படுகிறது?
மூன்று தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக காங்கிரஸ்சார்பில் போராட்டம் நடைபெறும் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications