புதிய ஆளுநர் ராமமோகன் ராவ் இன்று பதவியேற்பு
சென்னை:
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ். ராமமோகன் ராவ் நாளை (வெள்ளிக்கிழமை)பதவியேற்றுக் கொள்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதாவை முதல்வர் பதவி வகிக்க அழைத்ததாகப் புகார் கூறப்பட்ட பாத்திமாபீவி, தமிழக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஆந்திர ஆளுநரான டாக்டர் சி. ரங்கராஜனே தமிழக ஆளுநராகக் கூடுதல் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக ராமமோகன் ராவ் கடந்த 8ம் தேதி ஜனாதிபதி கே.ஆர். நாராயணனால்நியமிக்கப்பட்டார்.
நாளை சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் திருப்பதியிலிருந்து சென்னைக்கு வரும் ராமமோகன் ராவ், ராஜ் பவனில்தமிழகத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
ஓய்வு பெற்ற ஆந்திர மாநில டி.ஜி.பியான 67 வயதாகும் ராமமோகன் ராவ், சென்னை பிரசிடென்சிகல்லூரியில்தான் (முதுகலை-இயற்பியல்) படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் சென்னைக்கு வருவது ஏதோ சொந்த ஊருக்குப் போவதைப் போல உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தின் இடைக்கால ஆளுநராக இருந்து வரும் ஆந்திர மாநில ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜன்இன்று காலை விடை பெற்றுக் கொண்டு ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். நேற்று இவரை தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் ராஜ் பவனில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications