24ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார் ஜெ.
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வரும் 24ம் தேதி ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் பிரச்சாரம் குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை.
ஆண்டிப்பட்டி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மற்றும் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வது ஆகியவைதான் என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமானவையாக இருக்கும்.
அதிமுக கூட்டணியிலிருந்து தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகிப் போய்விட்டதால் எனக்கு வெற்றி கிடைக்காதுஎன்று நினைப்பது தவறு.
தமிழக மக்களைத்தான் நாங்கள் முழுவதுமாக நம்பியுள்ளோம். ஆண்டிப்பட்டி மக்களின் ஒட்டு மொத்த ஆதரவால்என்னுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாகவே உள்ளது.
மேலும் மதச்சார்பற்ற கூட்டணி உடைந்ததற்கு அதிமுக காரணமல்ல. அதிமுகவுடன் உறவைத் துண்டித்துக்கொண்டதன் மூலம் தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
ராஜ்யசபா தேர்தலில் தமாகாவுக்கு எம்.பி. சீட்டைக் கொடுக்கவில்லை என்பதற்காகத்தான் அக்கட்சி விலகியுள்ளதாஎன்பது குறித்து எனக்குத் தெயாது. எம்.பி. சீட் வேண்டும் என்று அக்கட்சியும் எங்களிடம் கோரவில்லை.
மேலும் அந்த எம்.பி. சீட் தமாகாவிற்கு மட்டுமே சொந்தமானதல்ல. அதில் யார் வேண்டுமானாலும்போட்டியிடலாம்.
3-வது அணி அமையுமா என்பது குறித்துத் தெயாது, அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியலில்,கூட்டணிகள் அமைவது என்பது முக்கியமானதே. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை உடைக்க நாங்கள்எப்போதுமே முயன்றதில்லை. அது எங்களுக்குத் தேவையும் இல்லை.
திமுக மீதான மேம்பால வழக்குகள் கிடப்பில் போடப்படவில்லை. இதுபோன்ற இன்னும் பல வழக்குகள்காத்திருக்கின்றன. அவை குறித்து இப்போது எதுவும் கூற இயலாது. குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாகதண்டிக்கப்பட்டே தீருவார்கள் என்றார் ஜெயலலிதா.
"தங்களை மதிக்கவில்லை என்று தமாகா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு போன்ற கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்களே" என்று கேட்டதற்கு, "உரிய மரியாதையை நாங்கள் அளித்தோம். மேலும் அளவுக்கு மீறி பலசலுகைகளையும் அவர்களுக்கு அளித்தோம். அவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்" என்றுஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமைஅலுவலகத்தில் உள்ள அவருடைய சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்.
பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் ஜெயலலிதா வழங்கினார். எம்.ஜி.ஆர். தொடர்பானஒரு நூலையும் அவர் வெளியிட, அதை முதல்வர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications