எல்லாம் பாக். கையில்தான் உள்ளது: பாவல் திடீர் பல்டி
டெல்லி:
பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே திரும்பவும்பேச்சுவார்த்தை நடக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல் இன்று(வெள்ளிக்கிழமை) டெல்லியில் கூறினார்.
டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோரைச் சந்தித்துப்பேசிய பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் நிருபர்களிடம் பேசியபோதுதான் பாவல்இவ்வாறு தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கான சரியான பாதையை நோக்கித்தான் இரு நாடுகளும் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால்பாகிஸ்தான் அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அந்தப் பாதையில் தொடர்ந்து செல்ல முடியும்என்றும் பாவல் கூறினார்.
இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பிறகு தற்போது உங்கள் (நிருபர்கள்) முன்னால் நான் தெம்பாக நின்றுபேச முடிகிறது. இந்தப் பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என்றும் பாவல் நம்பிக்கை தெரிவித்தார்.
நிருபர்கள் கூட்டத்தில் பேசிய ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளில் 14 பேர்இந்தியர்கள்தான் என்றார்.
இவர்கள் அனைவரும் கராச்சியில் உள்ள மலைக் குகைகளில் ஒளிந்து கொண்டிருப்பதாகப் பாகிஸ்தான் கூறுகிறது.ஆனால் கராச்சியில் குகைகளே இல்லை என்பது எல்லோருக்கும், ஏன், பாகிஸ்தானுக்கும் கூடத் தெரியும் என்றும்சிங் கிண்டலாகக் கூறினார்.
அந்த 20 தீவிரவாதிகள் குறித்து பாவல் கூறியபோது, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முஷாரப் மறுப்புஏதும் கூறவில்லை என்றார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் பாவல் இன்று சந்தித்து இந்திய-பாகிஸ்தான் நிலவரம் குறித்துப்பேசினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications