ஸ்பீடு பிரேக்கர்களான பழைய டயர்கள்: திண்டுக்கல் எஸ்.பியின் நூதன ஐடியா
சென்னை:
சாலை தடுப்புகளை அமைக்க அரசிடம் பணம் இல்லாத காரணத்தால் நூதன முறையில் சாலைத் தடுப்புகளைஅமைத்து திண்டுக்கல் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார் அந்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்.
திண்டுக்கல் நகரின் முக்கியமான பகுதிகளில் ஒன்று நேருஜி நகர் ஐந்து ரோடு சந்திப்பு. திண்டுக்கல்-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது.
அதிக அளவில் போக்குவரத்து உள்ள இந்த சாலையில், டிராபிக் சிக்னலோ அல்லது சாலைத் தடுப்புகளோஇல்லாமல் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இந்தப் பகுதியில் விபத்துக்கள் நடப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இந்த சந்திப்பில் உடனடியாக டிராபிக் சிக்னல் அமைக்க வேண்டும், வாகனங்களை ஒழுங்குபடுத்த சாலைத்தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்தும் வகையில் அரசிடம் பணம் இல்லை என்றுதெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்தப் பிரச்சினைக்குத் தற்காலிகமாக முடிவு கட்டும் வகையில் நூதன ஐடியா ஒன்றை மாவட்டகாவல்துறைக் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி செயல்படுத்தினார்.
நகர் முழுவதும் வீணாக தூக்கி எறியப்படும் பழைய டயர்களை வாங்கி வரச் செய்தார். பின்னர் அவற்றை இரண்டுதுண்டாக வெட்டச் சொன்னார். வெட்டப்பட்ட டயர்களை சாலைத் தடுப்புகளாக போடச் சொன்னார்.
வித்தியாசமான இந்த சாலைத் தடுப்புகள் பார்ப்பதற்கு நூதனமாக இருந்தாலும் ஐந்து ரோடு பகுதியில் செல்லும்வாகனங்கள் சாலைத் தடுப்புகளை மதித்து செல்வது பொதுமக்களைக் கவர்ந்து விட்டது.
கையில் காசு இல்லாத நிலையில் அரசுக்கு சிக்கனமான முறையை கற்றுக் கொடுத்த எஸ்.பியை பொதுமக்கள்வாயாரப் பாராட்டுகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications