டான்சி வழக்கு: ஜெ. விடுதலையை எதிர்க்கும் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி:
ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டுமனுக்கள் மீதான விசாரணையை வரும் 22ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
டான்சி வழக்கில் ஜெயலலிதா உட்பட அனைவரையும் விடுதலை செய்து சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம்தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் டான்சி நிலம் அரசு நிலமே அல்ல என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உட்படமொத்தம் 5 மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
டான்சி நிலம் அரசு நிலமே அல்ல என்று உயர் நீதிமன்றம் தவறாகத் தீர்ப்பளித்துள்ளது, ஆனால் டான்சி நிலம்அரசுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று தன் மனுவில் பாரதி கூறியுள்ளார்.
அரசு அதிகாரிகளுடன் ஜெயலலிதா சதித் திட்டம் தீட்டி, டான்சி நிலத்தை வாங்கியதன் மூலம் அரசுக்கு ரூ.3.5 கோடிநஷ்டம் ஏற்படுத்தியுள்ளார் என்று என்று சுப்பிரமணியம் சுவாமி தன் மனுவில் கூறியுள்ளார்.
இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், மறுபடியும் தமிழகத்துக்கு ஆபத்து வரலாம். அதனால் அவரைஇந்த வழக்கு முடியும் வரை எந்த அரசுப் பொறுப்பையும் வகிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்சுவாமியின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களின் மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்ற பெஞ்ச் நீதிபதிகள் கே.டி.தாமஸ்மற்றும் துரைசாமி ராஜூ ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அவர்கள் இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications