வாஜ்பாய் - பாவல் இன்று சந்திப்பு
டெல்லி:
இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல் இன்று(வெள்ளிக்கிழமை) பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
பாகிஸ்தான் பயணத்தை ஏற்கனவே முடித்துவிட்ட பாவல், அந்நாடு தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகிறது என்று பேசியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பாவல் இந்தியா வந்து சேர்ந்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும்பதற்றத்தைக் குறைக்க அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக அவர் இன்று வாஜ்பாயிடம் சில முக்கிய விவாதங்களை நடத்துவார் என்றுதெரிகிறது.
ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாட்டின் தலையீடே கூடாது என்று ஏற்கனவே இந்தியா அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
எதிர்க் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோரையும்பாவல் சந்தித்துப் பேசவுள்ளார்.


Click it and Unblock the Notifications
