ரூ.50 கோடி மோசடி செய்த கம்ப்யூட்டர் நிறுவனத்தை சூறையாடிய பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தில் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்த கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்த பொருட்களை பொதுமக்கள்அள்ளிச் சென்றனர்.

சேலம் பேர்லாண்ட்சில் பிசினஸ் சொல்யூசன் என்ற பெயரில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து டேட்டா டெக்ஸ்டு பைல்களை வாங்கி டேட்டா பேஸ் பைல்களாக மாற்றிகொடுக்கும் வேலைத் தருவதாகவும் அறிவித்தது.

மேலும் பணி கொடுப்பதற்கு முன்பணம் கட்ட வேண்டும் என்றும், அந்த முன்பணம் எவ்வளவு கட்டப்படுகிறதோஅதற்கு தகுந்தபடி பணிகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தை நம்பி ஏராளமானவர்கள் முன்பணம் கட்டினர். அவர்களுக்கு பணிகளும், அதற்குரிய ஊதியமும்வழங்கப்பட்டன.

கம்ப்யூட்டர் படித்து விட்டு வேலையில்லாமல் இருந்த இளைஞர்கள் பலர் கூட்டமாக சேர்ந்து இதில் பணம் கட்டிஇருந்தனர். இவ்வாறு சுமார் ரூ.50 கோடிக்கும் மேற்பட்ட அளவில் இங்கு பணம் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இங்கு முதலில் சரியாக வேலை கொடுப்பதும், அதற்கு குறித்த தேதியில் பணம் பட்டுவாடா செய்வதும் நடந்துவந்துள்ளது. ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த நிறுவனம் சிக்கலில் மாட்டிக் கொண்டதாககூறப்படுகிறது. முதல் தவணை பணம் கொடுப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் உறுப்பினர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொடுக்க வேண்டியபணத்துக்கு மிகவும் குறைந்த அளவே பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பணம் கட்டியவர்கள் மத்தியில்அதிருப்தி நிலவியுள்ளது.

ரூ.50,000 பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு ரூ.5,000 கொடுத்து மீதியை நாளை, நாளை மறுநாள் என்றுசொல்லி பணம் கட்டியவர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த நிலையில் அனைவருக்கும் நேற்று (வியாழக்கிழமை)பணம் பட்டுவாடா செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை நம்பி அலுவலகத்துக்கு முன்பு நேற்று அதிகாலையிலிருந்தே இளைஞர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.ஆனால் அலுவலகத்தில் ஒரு நோட்டீஸ் மட்டும் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் அக்ரிமெண்டுகளை வரும் 25ம்தேதிக்குள் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.

இதனால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகத்திலும் பொறுப்பாக பதில் சொல்ல யாரும்இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பணம் கட்டியவர்கள் அலுவலகத்தில் நுழைந்து, அங்கிருந்த கம்ப்யூட்டர்,டிஸ்குகள், மேஜைகள், நாற்காலிகள் ஆகியவற்றை அள்ளி சென்றனர். தூக்கமுடியாத பொருட்களை ஆட்டோவில்வைத்து அள்ளிச் சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், ஏமாற்றத்தோடுஇருந்தவர்களை சமாதானப்படுத்தினர். பொருட்களை தூக்கிச் சென்ற சிலரை போலீசார் பிடித்து போலீஸ்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பணம் கட்டியவர்கள் ஏமாற்றப்பட்டதை குறித்து இதுவரை எந்த புகாரும் கொடுக்கவில்லை. அவ்வாறு யாராவதுபுகார் கொடுத்தால் அதன் பேரில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர்ராஜதுரை கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு இதே போல் ஒரு நிறுவனம் சேலத்தில் ரூ.5 கோடிக்கு மேல் மோசடி செய்து அதன்உரிமையாளர் தலைமறைவாகி விட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்களால் சேலத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+