வாணியம்பாடி சீட்: ஜெ.வைச் சந்தித்தார் சுலைமான் சேட்
சென்னை:
இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியத் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரதுஇல்லத்திற்குச் சென்று சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இது மரியாதை நிமித்தமானசந்திப்பு. சேட்டுடன், கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர் என்று கூறப்பட்டிருந்தது.
இந்திய தேசிய லீக் கட்சியின் துணைத் தலைவர் அப்துல் லத்தீப் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவால் வாணியம்பாடி சட்டசபைத்தொகுதி காலியாகியுள்ளது. அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 21ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போலி வாக்காளர்பிரச்சினை தொடர்பாக தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
வாணியம்பாடி தொகுதியிலும் அதிமுகவே போட்டியிடும் என்று ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனால் தேசிய லீக் கட்சியினர்அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஜெயலலிதாவுடன் பேசுவோம் என சுலைமான் சேட் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந் நிலையில் ஜெயலலிதாவை, சேட் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வாணியம்பாடி தொடர்பாகவே அவர் ஜெயலலிதாவைசந்தித்தார் என்று கூறப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications